கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்டம்
கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்டம்
கற்றலில் ஆர்வம், பயன்பாட்டில் திறமை
நம் இளந்தலைமுறையினரிடத்தில் கருத்துப்பரிமாற்றத் திறன்களை வலுப்படுத்துவதும், மாணவர்கள் அவர்தம் பண்பாட்டு மூலங்களை அறிந்து போற்றுவதற்கு உதவும் வகையில் அவர்களிடத்துப் பண்பாட்டு விழிப்புணர்வை உண்டாக்குவதும், சிங்கப்பூரர்களை ஆசியாவுடனும் உலக நாடுகளுடனும் இணைந்து நிற்கும் ஆற்றலுடையவர்களாக உருவாக்குவதும் தாய்மொழிக் கல்வியின் முக்கிய நோக்கங்களாகும்.
தாய்மொழிப் பாடக்கலைத்திட்டமானது மாணவர்களிடம் மொழித்திறன்களில் வலுவான அடிப்படையை அளிப்பதன்மூலம் மொழியைத் திறம்படப் பயன்படுத்தும் ஆற்றல் உடையவர்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பேசுதல், கேட்டல், படித்தல், எழுதுதல் ஆகிய முக்கியத் திறன்களைக் கற்பிப்பதன்மூலம் அன்றாட வாழ்க்கையில் தாய்மொழியில் கருத்துப்பரிமாறக்கூடிய திறன்களையும் வளர்க்கிறது.
தாய்மொழிப் பாடத்திட்டத்தில் தகவல் தொடர்புத் தொழில்நுட்பம், நற்குணம் மற்றும் குடியியல் கல்வி, சமூக மனவுணர்வு சார்ந்த கற்றல் கூறுகள் ஆகியவற்றை இணைப்பதன் வாயிலாக மாணவர்கள் பண்பாட்டு விழுமியங்களை நன்கு அறிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. மேலும், மாணவர்களிடத்தில் உயர்சிந்தனைத் திறன்கள் வளர்க்கப்படுவதோடு பலதரப்பட்ட நடைமுறைச் சூழல்சார்ந்த எழுத்துப்படைப்புகளும் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் தாய்மொழியை வாழும் மொழியாக நிலைபெறச் செய்து இளந்தலைமுறையினர் பயன்மிகு வாழ்க்கை வாழ வழிகாட்டுகிறது.
கல்வி அமைச்சின் தாய்மொழிப் பாடக்கலைத்திட்டத் தகவல்கள், பாலர் கல்விமுதல் பல்கலைக்கழகப் புகுமுகக் கல்விவரை வழங்கப்படும் பல்வேறு தாய்மொழி கற்றல் வாய்ப்புகளைப் பற்றிய புரிந்துணர்வைப் பெற்றோர்களிடத்திலும் கல்வியாளர்களிடத்திலும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தத் தகவல்கள் மகிழ்வூட்டக்கூடிய முறையில் தாய்மொழி கற்றலில் பிள்ளைகளை ஈடுபடுத்தப் பெற்றோர்களுக்கும் கல்வியாளர்களுக்கும் துணைபுரியும் என நம்புகிறோம்.
Nurturing Active Learners and Proficient Users
The key purpose of MTL education is to equip our young with effective communication skills and to create a greater awareness and appreciation about our culture and values, which in turn enables our young to have the confidence to connect with similar language communities across Asia and the world.
The MTL curriculum aims to develop our young to be proficient language users who have strong foundational language and literacy skills. It leverages on students’ written and interpersonal communication skills with real-life contexts via the fundamental language skills such as speaking, listening, and reading. The infusion of ICT, CCE and SEL into the curriculum further enhances the learning and exposes our young to understand the cultures and values weaved throughout the curriculum. It also aims to develop higher order thinking skills and expose students to a wide variety of literary and authentic texts. This is intended to make MTL a living language that enables our young to lead purposeful lives.
The information featured in our MOE MTL curriculum webpage aims to provide parents and educators with an understanding of the different opportunities for MTL learning beginning from Pre-school, Primary, Secondary and Pre-University. There will also be tips for parents and educators to gain insights and gather ideas to bring the joy of learning MTL to our young and to better support them in this journey.
