மகிழ்வூட்டும் நாடகம்
‘மகிழ்வூட்டும் நாடகம்’ என்னும் திட்டமானது, பாத்திரமேற்று நடித்தல் என்னும் உத்திமுறையைப் பயன்படுத்தித் தாய்மொழி கற்றலை வீட்டிலும் ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது. இது படித்தல், சொல்லுதல், நடித்தல் என்னும் மூன்று படிநிலைகளைக் கொண்ட செயல்முறையை உள்ளடக்கியது.
இவ்வுத்திமுறையானது பிள்ளைகள் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களை நடைமுறைக்கேற்ற வீட்டுச்சூழலில் பயன்படுத்தித் தங்கள் குடும்பத்தாருடன் தாய்மொழியில் அர்த்தமுள்ள கருத்துப்பரிமாற்றத்தில் மகிழ்வுடன் ஈடுபடுவதற்கு உதவுகிறது. குடும்பப் பிணைப்பு வலுப்படுவதோடு, பாத்திரமேற்று நடித்தலின்வழிப் பிள்ளைகளின் படைப்பாற்றல் திறனும் பிரச்சினைக்குத் தீர்வு காணும் திறனும் வளர்கின்றன. மேலும், பிள்ளைகள் வெவ்வேறு பாத்திரங்களேற்று நடிப்பதால், தங்கள் தாய்மொழியில் தன்னம்பிக்கையுடன் உரையாடும் திறனையும் பெற இவ்வுத்திமுறை உதவுகிறது.
Fun With Drama
‘Fun With Drama’ is about promoting the learning of Mother Tongue Languages (MTL) through the use of dramatic play at home. The approach features a 3-step process namely, Read, Retell and Re-enact (or R3).
Dramatic play at home provides fun and enjoyable opportunities for children to interact with family members using household objects, props and authentic home settings that are real, relevant and meaningful to them. Apart from promoting family bonding and children’s creativity and problem-solving skills, it also helps to strengthen their communication skills and confidence in using their respective Mother Tongue Languages.