ஆற்றல்மிகு ஒளிக்காட்சிகள்வழிப் படைப்பாக்க
உரையாடல்
உட்லண்ட்ஸ் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தமிழில் சரளமாகப் பேசுவதற்கும் வாசிப்பதில் அவர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் தொழில்நுட்பத்தைச் சார்ந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டன. மாணவர்களின் பேசுதல் அல்லது உரையாடல் திறனை மேம்படுத்த மாணவர்களே தயாரித்த ஒளிக்காட்சி ஊக்கக்கூறுகள் பயன்படுத்தப்பட்டன.
ஒளிக்காட்சிகளைத் தயாரித்தல், குறும்படங்களை வழிகாட்டு வினாக்களின் அடிப்படையில் விமர்சனம் செய்தல், பாடநூல், பயிற்சிநூலிலுள்ள பனுவல்களைக் கதை சொல்லும் பாணியில் தயாரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபட்டனர். குறிப்பாக, மாணவர்களுக்கு ஒளிக்காட்சிகளை உருவாக்குவதற்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
நோக்கம், உள்ளடக்கம், படைப்பாற்றல் முதலியவற்றின் அடிப்படையில் ஒளிக்காட்சியில் இடம்பெற வேண்டிய கூறுகளாகப் படங்கள், புகைப்படங்கள், பேட்டிகள், இசை, குரல் பதிவு, விளக்கங்கள் ஆகியவை நிர்ணயிக்கப்பட்டன. இதனால், தரமான ஒளிக்காட்சிகள் கிடைத்தன.
இவற்றைக் கொண்டு மாணவர்கள் தங்களுடைய படைப்பாற்றலை விமர்சனம் செய்தல், வினாக்களுக்கு விடையளித்தல் முதலிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நடவடிக்கைகள் மாணவர்களின் கருத்துவளம், உச்சரிப்பு, உரையாடல்களில் தெளிவு முதலியவற்றை மேம்படுத்த உதவின.
The Power of Videos in Creative Conversations
‘The Power of Videos in Creative Conversations’ project focuses on how to engage students in spoken conversations. Using technology that appeals to students, along with a framework of purpose, content, creativity and production, students are guided to develop their own videos. In addition, students are taught the technical aspects of video production. This leads to the production of interesting videos which value-add to the students’ learning which are then used as triggers to proactively engage students in conversations.