தன்னம்பிக்கையுடன் தமிழில் பேசி ஒளிப்பதிவு செய்தல்
Back | View Speaker's profile here | View Synopsis here |

Mdm Kalpana Ramalingam
திருவாட்டி கல்பனா ராமலிங்கம்
முன்னாள் ஊடகக் கலைஞர்
தன்னுரிமைத் தொழிலர்
தன்விவரம்
கடந்த 22 ஆண்டுகளாக ஊடகத் துறையில் பணியாற்றிய அனுபவம் திருவாட்டி கல்பனாவுக்கு உண்டு. இவரது பல படைப்புகள் உள்ளூர்ப் பிரதான விழா விருதுகளைப் பெற்றுள்ளன. மாணவர்களின் எழுத்துத் திறனையும், படைப்பாற்றல் திறனையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு படைக்கப்படும் "நானும் ஒரு படைப்பாளி" நிகழ்ச்சிக்குப் பங்காற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு.
Profile
Mdm Kalpana Ramalingam has been in the media field for the past 22 years. She has produced, directed, and scripted numerous local Tamil Emmy Award (Pradhana Vizha) winning programmes. Her scripts have covered many genres such as info-educational, infotainment and variety programmes. Kalpana has also worked with MOE on their Naanum Oru Padaippali Programme, a programme that gives an opportunity for students to explore their talents and flair for writing. Kalpana is very passionate about Tamil language and has contributed significantly in promoting Tamil Language in the media field.
சுருக்கவுரை
திறம்படக் கருத்துப்பரிமாறிக்கொள்வது இன்றைய மாணவர்களுக்குத் தேவையான ஒரு முக்கியத் திறன். தமிழில் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த உதவவே மாணவர்களுக்கு இந்த உற்சாகமூட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களைப்பற்றியும் தங்கள் எண்ணங்களைப்பற்றியும் தமிழில் முதலில் எழுதுவர். தாங்கள் எழுதியவற்றைத் தன்னம்பிக்கையுடன் எவ்வாறு ஒரு படப்பிடிப்புக் கருவியின் முன்நின்று படைப்பது போன்ற உத்திகள் அவர்களுக்குக் கற்றுத்தரப்படும். தாங்கள் படைப்பதைப் பார்க்கும் வாய்ப்பும் அவர்களுக்கு உடனுக்குடன் வழங்கப்படும். இதன்மூலமாக உச்சரிப்பின் முக்கியத்துவத்தையும் படைக்கும் முறைமைபற்றியும் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள்; தெளிவு பெறுவார்கள்.
Synopsis
Effective communication is a crucial skill. This engaging and interactive session provides useful tips to help children express themselves clearly and confidently in Tamil. The children will be asked to write simple sentences about themselves in Tamil. The session will allow children’s personality and confidence to shine through, as they will have the opportunity to face the camera and deliver their written lines with confidence. Additionally, the session will highlight the significance of pronunciation and effective intonation, further enhancing their understanding of these important aspects of language.