திருவாட்டி கேசவன் பிந்து
Back

தலைசிறந்த பாலர் பள்ளி தாய்மொழி ஆசிரியருக்கான விருது

மேற்கோள்

இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை மனத்திற்கொண்டு, மழலைச் செல்வங்களின் உள்ளங்களில் மொழி மீதான ஆர்வத்தை வளர்க்க வேண்டும். அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழை நேசித்து அதைப் தன்னம்பிக்கையோடு பயன்படுத்த வேண்டும். அதற்கு இயல்பான கற்றல் சூழலில் ஆடல் பாடலுடன் பாரம்பரிய மற்றும் எளிமையான விளையாட்டுகள்வழித் தொழில்நுட்பத்தையும் இணைத்து மகிழ்வூட்டும் வண்ணம் கற்பித்தல் வேண்டும். நம் தமிழ்மொழியைக் கற்பிக்க எனக்குக் கிடைத்த இந்த அரிய வாய்ப்பை எண்ணி நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

எழுத்து விளக்கம்

திருவாட்டி கேசவன் பிந்து பிள்ளைகளைக் கவரும் வகையில் பாடங்களை அமைத்துள்ளார். பிள்ளைகளை மையமாகக்கொண்ட கற்றல் கற்பித்தலில் அதிக ஈடுபாடு உண்டு என்பதை அவரின் பாடங்களின்வழி உணர முடிகிறது. அவர் இருவழிக் கருத்துப்பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தம்முடைய பாடங்களை நன்கு வடிவமைத்துக் கற்பிக்கிறார். பிள்ளைகளுடன் அவர் கொண்டுள்ள நல்லுறவும் வகுப்பறைக் கட்டொழுங்கும் கற்றலுக்கு உகந்த பாதுகாப்பான கற்றல் சூழலைச் சிறப்பாக அமைத்துத் தருகின்றன. மேலும், அவருடைய தெளிவான கட்டளைகளும், விளக்கங்களும் பிள்ளைகள் ஆர்வத்துடன் பாட நடவடிக்கைகளில் ஈடுபட உதவுகின்றன. சிறு பிள்ளைகள் ஒவ்வொருவரும் கல்வி வளர்ச்சியிலும் பழகும் முறையிலும் தனித்துவமிக்கவர்கள் என்பதை நன்கு உணர்ந்தவர் திருமதி கேசவன் பிந்து ஆவார். ஆகவே, தம்முடைய பிள்ளைகளின் வளர்ச்சிக்கேற்ப இயல்பான கற்றல் அனுபவங்களை உருவாக்குகிறார். மேலும், தக்க நேரத்தில் அவர் தம் பிள்ளைகளுடன் நிகழ்த்தும் கருத்துப்பரிமாற்றம் பிள்ளைகளது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக அமைகிறது. தொடர்ந்து அவர் தம்முடைய பிள்ளைகளது கற்றலை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கமூட்டும் சொற்களை அடிக்கடி பயன்படுத்துகிறார். இவை பிள்ளைகளுக்கு ஏற்புடைய கற்றல் அனுபவத்தை வழங்கத் துணைபுரிகின்றன. அர்த்தமுள்ள முறையில் பண்பாட்டுக் கூறுகளையும் புலன்சார்ந்த நடவடிக்கைகளையும் தம்முடைய பாடங்களில் திருமதி கேசவன் பிந்து ஒருங்கிணைத்து மகிழ்வூட்டும் வகுப்பறை சூழலை அமைக்கும் திறமைவாய்ந்தவர்.

Quote

Keeping in mind that today's students are the leaders of tomorrow, we need to inculcate an interest in language in the hearts of the children. They should love Tamil and use it with confidence. I create a vibrant language learning environment through songs, dances, cultural games, and technology to instil a sense of passion in the children to learn the Tamil language. I am grateful to be a Tamil language teacher.

Write-up

Mdm Kesavan Bindu provides a safe and conducive learning environment for her students to learn Tamil. Her care and concern for her students is seen in the ways she actively listens to them. She also provides many opportunities for her students to use Tamil by encouraging them to talk about their daily life experiences. Through the use of effective teaching strategies, she provides integrated learning activities that match the different learning needs of the children, thus arousing and sustaining her students’ interests throughout her lessons. Her student-centric lessons are filled with enriching learning experiences and cultural elements, which in turn foster healthy interactions among the children while also creating the environment that allows the learning of Tamil to thrive. With clear instructions provided, her students are also able to much better understand and enjoy the activities she plans for them, contributing to the joyful experience her students have in her classroom.

For the best and most accurate viewing experience of this site , the fonts, Murasu Anjal and KaiTi will need to be installed on your device.