Ms Sajini Naidu
Back | View Speaker's profile here | View Synopsis here |

Ms Sajini Naidu
குமாரி சஜினி
தித்திக்கும் தமிழ்
தன்விவரம்
குமாரி சஜினி கற்பித்தல்மீது கொண்ட ஆர்வத்தால் 2009-ஆம் ஆண்டுமுதல் கல்வியாளராகத் திகழ்கிறார். மொழி, பேச்சுத்திறன், நாடகக் கலை முதலியவற்றைக் கற்பிப்பது இவரது சிறப்பம்சங்கள். இவர் தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காகப் பல்வேறு பயிலரங்குகளையும் ஆர்வமூட்டும் வகுப்புகளையும் நடத்தி வருகிறார். தமிழ்மொழிமீதும் தமிழ்ப் பண்பாட்டின்மீதும் இவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் தம் மாணவர்களிடமும் காண விரும்புகிறார். குமாரி சஜினி சிங்கப்பூர் மக்களுக்கு நன்கு அறிமுகமான தொலைக்காட்சிப் பிரபலமாகவும் நாடகக் கலைஞராகவும் விளங்குகிறார். இவர் தம் கருத்துகளைத் தாய்மொழியாம் தமிழில் கூறுவதைத் தமக்கான அடையாளமாகக் கொண்டுள்ளார். ஒரு நடிகராகவும் கல்வியாளராகவும் இருப்பதைப் பெருமையாக எண்ணும் சஜினி கற்றல் என்றும் நிரந்தரமானது என்று உறுதியாக நம்புகிறார்.
Profile
Ms Sajini has been a passionate educator since 2009. Her specialty includes teaching Language and Literacy, Speech and Drama, and Art. She has conducted multiple workshops and enrichment classes for primary and secondary school students, hoping to pique their interest and spread her love for Tamil language and culture. Ms Sajini is also a well-established television personality and experienced theatre performer who actively uses her voice to proudly promote speaking in one’s Mother Tongue. She strongly believes that learning is life-long. Being both an actor and an educator are her greatest joys.
Tamil Is Fun and Joyful
சுருக்கவுரை
அனுபவம் வாய்ந்த கல்வியாளரான குமாரி சஜினி தமது பயிலரங்கின்வழி மாணவர்கள் தமிழ்மொழியை ஈடுபாட்டுடன் பயன்படுத்தத் தூண்டுவார். தொடக்கநிலை ஒன்றுமுதல் நான்குவரை பயிலும் மாணவர்கள் சுவாரசியமான மின்பயணத்தின்வழித் தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சொற்களைக் கற்றுக்கொள்வர். வேடிக்கையான ஆர்வமூட்டும் நடவடிக்கைகளின்வழி மாணவர்கள் தாங்கள் கற்ற சொற்களைப் பயன்படுத்தித் தங்களது கருத்துகளைக் கூறுவர். இப்பயிலரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தித்திக்கும் தேன்தமிழ்ச் சுவையைச் சுவைத்து மகிழ்வர்.
Synopsis
In this engagement segment with Ms Sajini, Primary 1 to 4 students will embark on a fun-filled e-journey that gives them the opportunity to actively explore and learn new vocabulary related to their daily lives. Through these activities, students will be immersed in authentic situations in which to use their newly-acquired vocabulary by presenting their creative ideas in Tamil. This hands-on experience will leave a memorable impression on children that learning Tamil is indeed fun, thus motivating them to use the language.
For the best and most accurate viewing experience of this site , the fonts, Murasu Anjal and KaiTi will need to be installed on your device.