இளமையில் தமிழ்
Back | View Speaker's profile here | View Synopsis here |

Dr Jeyarajadas Pandian
முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன்
ஓய்வுபெற்ற தலைமை முதன்மையாசிரியர் (தமிழ்மொழி)
பகுதி நேர விரிவுரையாளர் (தேசியக் கல்விக் கழகம்)
தன்விவரம்
முனைவர் ஜெயராஜதாஸ் பாண்டியன் 44 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றவர். இவர் தமிழாசிரியராகவும், 'நற்குடிமக்கள்' தமிழ்ப் பாடநூலாக்கக்குழுவின் பொறுப்பாளராகவும், மூத்த பாடக்கலைத்திட்டச் சிறப்பாய்வாளராகவும், துணை முதல்வராகவும், உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் மேற்பார்வையாளராகவும், தலைமை முதன்மை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பாடக்கலைத்திட்ட வரைவு, மேம்பாட்டுப் பிரிவின் பாலர் பள்ளித் தமிழ்ப் பகுதியில் வளமேம்பாட்டு அறிவுறுத்துநராகத் தொடர்ந்து பங்காற்றி வருகிறார். பல பயிலரங்குகளையும் பகிர்வரங்குகளையும் வழிநடத்திய பரந்துபட்ட அனுபவம் இவருக்குண்டு. பாலர் பள்ளித் தமிழாசிரியர்களும் தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர்களும் பயனுறும் வகையில் பல்வேறு தலைப்புகளில் இவர் பயிலரங்குகள் நடத்தியுள்ளார். பாலர் பள்ளிமுதல் தொடக்கக் கல்லூரிவரையிலான நிலைகளில், தமிழ்மொழி கற்றலை மேம்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சின் பல்வேறு வழிநடத்து குழுக்களிலும் இவர் பங்காற்றியுள்ளார். முனைவர் பாண்டியன் 2009-ஆம் ஆண்டின் சிறந்த கருத்துருவாக்கத்திற்கான விருது பெற்றவர். ஆசிரியர், மாணவர் மேம்பாட்டுக்குப் பல வழிகளில் தொடர்ந்து பங்காற்றிவரும் முனைவர் பாண்டியனுக்கு, 2012-ஆம் ஆண்டில் தேசிய தினப் பாராட்டுப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.
Profile
Dr Jeyarajadas Pandian, a retired, Tamil language teacher, dedicated 44 years to MOE. He held various appointments, including Senior Curriculum Specialist, Vice-Principal, Supervisor of Tamil Language Centre and Principal Master Teacher in the Academy of Singapore Teachers. Currently, he serves as a resource person in the preschool section (Tamil language) of the Curriculum Planning and Development Division, MOE. He has contributed to steering committees in MOE to promote the learning of Tamil language from preschool to junior college. In recognition of his extensive experience in workshops and seminars and sharing sessions, he received the Best Ideator Award in 2009 and the National Day Commendation Award in 2012.
சுருக்கவுரை
இளஞ்சிறார்கள், இல்லத்தில் எளிதில் தமிழ் பேசுவதை ஊக்குவிக்க உதவும் சில வழிமுறைகளை இப்பயிலரங்கு எடுத்துரைக்கும். ‘ஆழ்ந்த கலந்துரையாடல்’வழிக் குழந்தைகளை இல்லத்திலும் இல்லத்துக்கு அப்பாலும் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுத்துவதற்குரிய பொருத்தமான உத்திகளைப் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்வர். மகிழ்வுறும் வகையில் சிறார்கள் தமிழ் கற்பதை ஊக்குவிப்பதில் எவ்வகைகளில் பெற்றோர்களுக்கு முக்கியப் பங்குண்டு என்பதை இப்பயிலரங்கு வலியுறுத்தும். உதாரணத்திற்கு, பெற்றோர்கள் அன்றாடம் நிகழும் வழக்கமான நடவடிக்கைகளில் தம் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துதல், கற்பிக்கத்தக்க தருணங்களையும் அனுபவமிக்க கற்றல் சூழல்களையும் உருவாக்குதல், இருவழித்தொடர்பின்போது பொருத்தமான ஏற்புடைய சொல்வளத்தைப் பயன்படுத்துதல் முதலிய அம்சங்களைப் பங்கேற்பாளர்கள் இப்பயிலரங்கில் அறிந்துகொள்வர். வீட்டில் மொழியைப் பயன்படுத்துவதன்வழித் தமிழை வாழ்நாள் முழுதும் கற்பதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்க இயலும் என்பதைப் பங்கேற்பாளர்கள் உணர்வர்.
Synopsis
The session will inspire young children to communicate in Tamil at home. Participants will learn strategies to engage their children and promote meaningful conversations through the ‘thick’ conversation approach. Emphasising the role of parents, the session highlights injecting joy in the learning of Tamil during daily routines at home, such as using Tamil terms for during all activities that can be ‘caught’ by their children. These teachable moments and conducting experiential learning create a strong base for lifelong learning of the language. The sharing session will also inform participants on the importance of relevant and appropriate vocabulary during daily interaction. The participants will be provided opportunities to share good ideas amongst participants.