நம்மால் இனிச் செந்தமிழ் செழிக்கும் — வாழும் மொழியாக நிலைக்க எளிய வழிகள்
Back | View Speaker's profile here | View Synopsis here |

Mrs Sarojini Padmanathan
திருமதி சரோஜினி பத்மநாதன்
பிள்ளை வளர்ப்பு, திருமண ஒருங்கிணைப்பாளர்
சுகாதார அறிவியல் ஆணையம்
தன்விவரம்
திருமதி சரோஜினி பத்மநாதன், நம்மிடையே பிரபலமான பேச்சாளர், பெற்றோருக்கான பயிற்றுவிப்பாளர். சிறப்பான திருமண வாழ்வு, பெற்றோர் பிள்ளை வளர்ப்பில் மேற்கொள்ளவேண்டிய அத்தியாவசிய உத்திகள், மகிழ்ச்சியான குடும்பம் எப்படி இருக்கவேண்டும் முதலிய பொருண்மைகளில் நாட்டம் கொண்டவர். இவர் தேசிய அளவிலான பல நிகழ்வுகளில் உரையாற்றியுள்ளார். தற்போது இவர் பொதுச் சேவைத்துறையில் பணியாற்றுகிறார். பயிற்றுவிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள இவர், குடும்பவியல் படிப்பில் பட்டயமும் பெற்றுள்ளார்; பெற்றோருக்கான பயிலரங்குகளை நடத்துவதில் பயிற்சியும் பெற்றுள்ளார். பொதுத்தொண்டு புரிவதில் நாட்டம் கொண்ட இவர், தேசிய அளவிலான பல அமைப்புகளில் அங்கம் வகிக்கிறார். அமைதித் தூதர் (Justice of Peace) என்னும் அங்கீகாரம் 2020-இல், நம் அதிபரால் இவருக்கு அளிக்கப்பட்டது. இவர் தமிழ்மொழியின்மீது மிகுந்த பற்றுள்ளவர். திருமதி சரோஜினி பத்மநாதன் தம்பதியருக்கு மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு பேத்தியும் உள்ளனர்.
Profile
Mrs Sarojini Padmanathan is a well-known motivational speaker who is passionate about delivering public speeches and educating fellow parents on child upbringing and maintaining a happy marriage. She has participated in several national-level panel discussions and spoken at conferences. Currently, she is working with the Singapore public service. She holds a Master of Business Administration Degree with specialisation in Training and Development, and a Diploma in Family Life Education. She has received numerous awards and accolades, including her latest appointment as a Justice of Peace. Sarojini is happily married with three lovely grown-up daughters and a granddaughter. She has great passion for the Tamil language.
சுருக்கவுரை
குழந்தைகளின் கல்வியில் அவர்களது குடும்பத்தினரின் ஈடுபாடு இன்றியமையாதது. பெற்றோர்களே பிள்ளைகளின் முதல் ஆசிரியர்களாகத் திகழ்கிறார்கள். அந்த வகையில், குழந்தைகளின் மொழி கற்றலில் பெற்றோர்கள் பெரும் பாங்காற்றுகிறார்கள். அதன் அடிப்படையில், இந்தப் பகிர்வரங்கின் வாயிலாகப் பிள்ளைகளின் மொழி கற்றலை மேம்படுத்துவதற்கான வழிவகைகளைப் பெற்றோர்கள் கற்றுக்கொள்ளலாம். அதோடு, வீட்டுச் சூழலில் விளையாட்டுமூலம் தமிழ்மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் வழிமுறைகளையும் அறிந்துகொள்ளலாம்; பல ஆக்கபூர்வமான முறைகளைப்பற்றியும் அறிந்துகொண்டு பயனடையலாம்.
Synopsis
Parents play a crucial role as their child’s first teachers. This session aims to provide effective strategies to help children flourish in the wonderland of spoken and written Tamil. Parents can collaborate with their children’s school and teachers to develop strategies that cultivate positive learning habits for Tamil language. During this session, participants will have the opportunity to explore different strategies that can be used at home to enhance the child’s learning, as well as discover creative ways to provide learning opportunities for children through varied activities.