குழந்தைகளுக்கும் பாலர்களுக்கும் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துதல்
Back | View Speaker's profile here | View Synopsis here |

Ms Renu Siva
திருவாட்டி ரேணு சிவா
நூலகர் (தமிழ்மொழி)
தேசிய நூலக வாரியம்
தன்விவரம்
தேசிய நூலக வாரியத்தின் நூல் சேகரிப்புத் திட்டமிடல் மேம்பாட்டுக் குழுவின் நூலகரான திருவாட்டி ரேணு சிவா, சிறுவர், இளையர் வாசிப்புத் நிகழ்ச்சிகளிலும் சேவைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேலான அனுபவமும் நிபுணத்துவமும் பெற்றவர். ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளிலுள்ள சிறுவர்கள், இளையர்களுக்குரிய தொகுப்புகள் முதலியவை குறித்து நன்கு அறிந்தவர். உள்ளடக்க மேம்பாடு, புத்தக மன்றங்கள், நூல் சேகரிப்புப் பரிந்துரைகள், சிறுவர் இளையர்களுக்கான நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு திட்டங்களை அவர் வழிநடத்தி வருகிறார். சிறுவர்கள், இளையர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் ஆகிய பல தரப்பினர்களுக்கும் அவர் பகிர்வுகளையும் பயிலரங்குகளையும் நடத்தியுள்ளார்.
Profile
A librarian from the Collection Planning & Development team in National Library Board, Ms Renu Siva has over 10 years of experience in library work, specializing in children and teen programmes and services. She is well versed with the junior and young peoples’ collection in the libraries in both English and Tamil languages. She handles a variety of projects from content development, book clubs, collection promotion and programmes for children and teens, and has conducted related sharing sessions and workshops for children, teens, parents and educators.
சுருக்கவுரை
ஆரம்பகால எழுத்தறிவு சிறுவர்களை வெற்றிகரமான வாசகர்களாகவும் வாழ்நாள் முழுவதும் கற்பவர்களாகவும் உருவாக்குகிறது. இந்தத் திறன்கள் ஒரு பிள்ளை நூல்களின்மீது ஆர்வத்துடனும் கற்றல் தயார்நிலையிலும் தொடக்கப்பள்ளிக்குச் செல்ல வழிவகுக்கின்றன. மேலும், தாய்மொழி வாசித்தலுக்குப் பிள்ளைகள் அறிமுகமாகும்போது, கற்றலை எளிதாக்கும் வலுவான மொழி அடித்தளத்தை அவர்கள் பெறுகிறார்கள். ஆரம்பகால எழுத்தறிவு ஏன் பிள்ளைகளின் வளர்ச்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகத் திகழ்கிறது என்பதையும் பிள்ளைகளுக்கு எந்தத் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துவது என்பதையும் எப்படி அவர்களுக்கு வாசிப்பை அறிமுகப்படுத்துவது என்பதையும் இந்தப் பகிர்வு விளக்கும். வாசிக்கக் கற்றுக்கொள்வதற்கான வழிகாட்டி, மொழித் திறன்களையும் தொடர்புத் திறன்களையும் வளர்க்கும் உத்திகள் ஆகியவற்றைப் பேச்சாளர் வழங்குவார். இவற்றோடு, பொருத்தமான தமிழ் வளங்களும் நூல் பரிந்துரைகளும் அறிமுகப்படுத்தப்படும்.
Synopsis
Early literacy equips children with tools to become successful readers and lifelong learners. These skills allow a child to enter primary school with a love for books and a readiness to learn. Exposure to reading in their Mother Tongue lays a strong foundation for language learning. This session will focus on why early literacy is important, when to introduce Tamil books to children, and how to get them started on reading. A step-by-step guide to reading and effective strategies that supports language development and communication skills will be shared by the speaker. The speaker will also share suitable Tamil resources and books.