Mr Mohan Suppiah
Blangah Rise Primary School
Head of Department
Mr Balajee Haridas
Ministry of Education
Curriculum Resource Development Officer, CPDD
தன்விவரம்
தமிழாசிரியர் திரு மோகன் சுப்பையா, தமிழ்மொழி கற்பித்தலில் பதினொரு ஆண்டுகளுக்குமேல் அனுபவம் வாய்ந்தவர். இவர், பிளங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் நற்குணம் மற்றும் குடியியல் கல்வித் துறைக்குத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். தேசியக் கல்விக் கழகத்தில், தமிழ்மொழியில் முதுகலைப் பட்டம்பெற்றுள்ளார். தமிழ் முரசும் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கமும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் இணைந்து வழங்கும் ‘நல்லாசிரியர் விருது’, தமிழ்ச்செய்தியின் ‘நவசுடர் விருது’, தேசியக் கல்விக் கழகத்தின் ‘பரிவுமிக்க ஆசிரியர்’ விருது முதலிய விருதுகளைத் திரு மோகன் பெற்றுள்ளார். இவை இவர் தமிழ்மொழியின்மீதும் மாணவர் நலத்தின்மீதும் கொண்டுள்ள பற்றுக்குச் சான்று பகருகின்றன. மேலும், இவர் தமிழாசிரியர்ப்பணியில் சேர விரும்புவோருக்குப் பணி தொடர்பான உரைகளையும் நிகழ்த்தியுள்ளார். பல மாநாடுகளில் கற்றல், பயிற்றுமுறைகள் தொடர்பான கட்டுரைகளைப் படைத்த அனுபவமும் திரு மோகனுக்கு உண்டு.
திரு பாலாஜி ஹரிதாஸ் கல்வி அமைச்சின் பாடக்கலைத்திட்ட வரைவு மேம்பாட்டுப் பிரிவின் தமிழ்மொழிப் பகுதியில் பாடக்கலைத்திட்ட வள மேம்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவர் தொடக்கப்பள்ளிகளுக்கான பயிற்றுவளங்களை வடிவமைக்கும் குழு உறுப்பினர்களுள் ஒருவராக இருக்கிறார். மேலும், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் செயற்குழுத் தலைவராகவும் பொறுப்பாற்றுகிறார். தமிழ்மொழியை இளையச் சமூகத்தினரிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் தமிழ்ச் சமூகத் தலைவர்கள் மற்றும் பங்காளித்துவ அமைப்பினர்களுடன் இணைந்து செயலாற்றிவருகிறார். இதற்குமுன் திலொக் குராவ் தொடக்கப்பள்ளியில் தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளராகவும் மாணவர் தலைமைத்துவத் துறைக்குப் பாடத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ்மொழியிலும் இலக்கியத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
சுருக்கவுரை
வாங்க தமிழ்மொழி கற்றலைச் சுவைமிகுந்ததாக்கலாம்!
பிள்ளைகளின் மொழி கற்றலுக்கு அடித்தளம் குடும்பத்தினரின் ஆதரவும் ஈடுபாடும் என்றால் அது மிகையாகாது. பிள்ளைகள் தாய்மொழியைக் கற்கவும் மொழித் திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் ஆசிரியர் - பெற்றோர் ஆகிய இருதரப்பினரது கூட்டுமுயற்சியும் ஒன்றிணைந்த பங்கும் மிகவும் முக்கியம். வீட்டில் தமிழ்மொழிப் புழக்கம் இருக்குமாயின் அது இயல்பான வாழ்க்கைச் சூழலில், பிள்ளைகள் மொழியைக் கற்றுக்கொள்ள ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றது. இது பள்ளியில் அவர்களது மொழிகற்றலுக்கு உறுதுணையாகவும் அமைகின்றது.
இந்தப் பகிர்வங்கத்தின் வாயிலாகப் பிள்ளைகளது தமிழ்மொழிகற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்குரிய புத்தாகமிக்க வழிமுறைகளைப்பற்றிப் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்வர். மேலும், எளிய விளையாட்டுகளை ஆக்கபூர்வமான வகைகளில் பயன்படுத்தித் தமிழ்மொழிகற்றலை மேம்படுத்துவதற்கான முறைகளையும் அறிந்துகொள்வர். இவ்வழிமுறைகளையும் அணுகுமுறைகளையும் எளிதில் செயற்படுத்துவதற்கேற்ற வகையில் புதிய தொடக்கப்பள்ளித் தமிழ்மொழிப் பாடநூல்களும் பயிற்றுவளங்களும் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும் புரிந்துகொள்வர். பிள்ளைகள் இல்லங்களிலும் பள்ளியிலும் மகிழ்வுடன் தமிழ்மொழியைக் கற்க இவ்வளங்கள் எவ்வாறு வழிவகுக்கின்றன என்பதையும் பங்கேற்பாளர்கள் அறிந்துகொள்வர்.
Profile
Mr Mohan Suppiah has eleven years of teaching experience as a Tamil Language Teacher. He is currently the Head of Department for Character and Citizenship Education (CCE) at Blangah Rise Primary School. He has completed his Master’s in Education (Tamil Language) at NIE/NTU and has a deep love for the Tamil Language. He has received various accolades for teaching such as the 'Most Inspiring Tamil Teacher Award' by Tamil Murasu, Singapore Tamil Teachers’ Union and the Tamil Language Learning and Promotion Committee, Mediacorp’s Tamil News ‘Navasudar’ Community Award and NIE’s ‘Caring Teacher’ Award. He has conducted career talks for aspiring Tamil Language teachers and has also presented his tested teaching pedagogies and methods at several local and international conferences.
Mr Balajee Haridas is a Curriculum Resource Development Officer for Tamil Language at the Curriculum Planning and Development Division, Ministry of Education. He is currently involved in developing teaching and learning resources for the Tamil Primary Curriculum. As the Head Secretariat for the Tamil Language & Learning Promotion Committee (TLLPC), he is also actively involved in promoting the Tamil Language to the larger Tamil community by working with key community leaders, stakeholders and partners. Prior to working at in MOE, he held the position of Tamil Coordinator and Subject Head for Student Leadership in Telok Kurau Primary school. He holds a Bachelor's Degree in Tamil Language and Literature.
Synopsis
Let’s Learn our Tamil Language!
Family involvement and support play an integral role in a child’s acquiring a language. This requires collaboration between schools and parents in supporting every step each child takes in learning and developing his/her language skills. Exposure to the Tamil Language at home gives children more opportunities to use the language in everyday life and also enables them to be more confident in using the language. This session will help participants to gain better understanding about the Primary Curriculum and learn how to create authentic opportunities and apply innovative strategies to foster a child’s learning of the Tamil Language at home.