கற்றல் கற்பித்தலில் நகைச்சுவையின் பங்கு
Back | View Speaker's profile here | View Synopsis here |

Dr Chitra Sankaran
முனைவர் சித்ரா சங்கரன்
இணைப் பேராசிரியர்
ஆங்கிலம் மொழியியல் மற்றும் நாடக ஆய்வுகள் துறை,
தேசிய பல்கலைக் கழகம்
தன்விவரம்
முனைவர் சித்ரா சங்கரன் (பி.எச்.டி லண்டன்), சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம், மொழியியல் மற்றும் நாடக ஆய்வுகள் துறையின் தலைவராகவும், இலக்கியத் துறையின் முதன்மையராகவும் பொறுப்பேற்றுள்ளார். இவர் தென்கிழக்காசிய சூழலியல் இதழின் தலைமைப் பதிப்பாசிரியராகவும் ஆசியான் நாட்டில் இலக்கியம், சூழலியல் ஆய்வுகள் சங்கத்தின் நிறுவனராகவும் தற்போதைய தலைவராகவும் உள்ளார். காமன்வெல்த் இலக்கியப் பரிசு, மான்ட் பிளாங்க் இலக்கிய விருது, தென்கிழக்காசிய எழுத்தாளர் விருது ஆகியவற்றிற்கான நடுவர் குழுவில் பணியாற்றியுள்ளார். இவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் தெற்காசிய, தென்கிழக்காசிய புனைகதை, சூழலியல் திறனாய்வு ஆகியவை அடங்கும். ‘தெற்காசிய, தென்கிழக்காசிய பெண்கள் புனைகதைகளில் பெண்கள், அடித்தட்டு மக்கள் மற்றும் சூழலியல்’ என்னும் இவரது புத்தகம் 2022-இல் வெளியிடப்பட்டது.
Profile
Dr Chitra Sankaran (PhD London), has served as Chair of Literature and Head, Department of English, Linguistics and Theatre Studies, National University of Singapore. She is the Chief Editor of the Journal of Southeast Asian Ecocriticism and the founding and current President of the Association for the Study of Literature and Ecology in ASEAN. Additionally, she has served as a judge on panels for Commonwealth Literary Prize, Mont Blanc Literary Award, etc. Her research interests encompass South and Southeast Asian fiction and ecocriticism. In 2022, she published her book titled “Women, Subalterns and Ecologies in South and Southeast Asian Women’s Fiction”.
சுருக்கவுரை
வகுப்பறையில் மாணவர் கற்றலில் ஈடுபடுவதற்குத் தடையாக உள்ளவற்றைத் தகர்க்க ஆசிரியருக்கு உதவும் பயன்விளைவுமிக்க கற்பித்தல் கருவி நகைச்சுவை என மொழி கற்பித்தலில் மேற்கொண்ட ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. சமூகத்துடன் அதிகம் தொடர்புகொள்ளாத மாணவர்கள் அதிகத் தன்னம்பிக்கையுடன் பங்கேற்க இவை உதவும். கிரிஸ்ட்மன்சன் (2000) என்பார், "தாக்கம்: இரண்டாம் மொழி வகுப்பறை: ஒரு மனவுணர்வுச் சூழலை எவ்வாறு உருவாக்குவது" என்னும் தமது கட்டுரையில் நகைச்சுவையாகக் கற்றுத் தருவது மாணவர்கள் சுயமாகவே சொல்வளத்தைப் பெற எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கியுள்ளார். நகைச்சுவை, வகுப்பறையில் மன அழுத்தத்தைக் குறைக்கிறது; மாணவர் கற்றலை ஊக்குவிக்கிறது என்றும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. நகைச்சுவையை ஒரு கற்பித்தல் கருவியாக முன்வைத்து, கருத்துகளை எடுத்துக்காட்டுகளுடன் அவர் விளக்குவார்.
Synopsis
Research in language teaching has shown that humour is an effective tool for breaking down instructor-student barriers in the classroom. They can boost the confidence of less sociable students and encourage active participation. Kristmanson (2000), in his article, "Affect: Second Language Classroom: How to Create an Emotional Climate" expounds on how an infusion of humour helps students expand their vocabulary in a more spontaneous manner. Research has shown that humour reduces friction and stress in the classroom and enthuses students’ learning. She will present on the use of humour as a pedagogical tool and provide examples to illustrate her points.