Mrs Rani Kanna & Mr Anandha Kannan

Mrs Rani Kanna &
Mr Anandha Kannan
AKT Creations
Directors
தன்விவரம்
திருமதி ராணிகண்ணா முழு நேரமாக கலைக் கல்வித்துறையில் ஈடுபட்டு வருகிறார். இவர் ஒரு முன்னாள் தமிழாசிரியர். சிங்கப்பூர்த் தேசிய கல்விக்கழகத்தில் ஆசிரியர் பயிற்சியையும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலையும் முதுகலையும் முடித்துள்ளார். சிங்கையிலும் மற்ற நாடுகளில் நடக்கும் கதை சொல்லும் விழாக்களிலும் இவர் பங்கேற்றுவருகிறார். இவரது கதை சொல்லும் பாணி மாணவர்களை எளிதில் ஈர்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும். தற்போது மரபுக்கலைகளின்வழி எவ்வாறு தமிழ்மொழி கற்றலை ஊக்குவிக்கலாம் என்பதையொட்டிய ஆய்வை மேற்கொண்டு வருகிறார். சிங்கையில் தமிழ் மாணவர்களுக்கு மரபுக்கலையையும் தமிழையும் ஒன்றிணைத்துக் கற்பித்தும் வருகிறார். 2014ஆம் ஆண்டுமுதல் பாலர் பள்ளி மாணவர்களுக்காக இசை நாடகத்தை வடிவமைத்து, இயக்கி, அதில் நடித்தும் வருகிறார். இந்நாடகங்கள் சிங்கையில் பல்வேறு பகுதிகளில் அரங்கேறியிருக்கின்றன. மாணவர்கள் மகிழ்வுறும் வகையில் தமிழ்மொழியைக் கற்க வேண்டும் என்பதே திருமதி ராணியின் இலக்கு.
நாடகக் கலைஞர் ஆனந்த கண்ணன் அவர்கள் தமிழ் மரபு நிகழ்கலை, நாடகம், கூத்து முதலான கலைகளின்மீது அதிக ஆர்வம் கொண்டவர். இக்கலைகளைக் கற்பதோடு கற்பித்ததைப் பகிர்ந்துகொள்ளவும் இவர் மிகுந்த ஆவலுடன் செயற்பட்டுவருகிறார். இவர் AK தியேட்டர் லிமிடெட் (சிங்கப்பூர்), ஆனந்தக் கூத்து டிரஸ்ட் (இந்தியா) ஆகிய நிறுவனங்களின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். நாடகங்களை
இயக்குவது, பயிலரங்குகளை வடிவமைப்பது போன்றவற்றில் இவர் ஈடுபட்டு வருகிறார். மகிழ்வூட்டும் வகையில் கல்வி கற்கப் பல வழிகளுண்டு என்பதை நிகழ்கலைகளைக்கொண்டு உணர்த்த முடியும் என்பது இவர் கொண்டுள்ள சித்தாந்தமாகும். இவர் சிங்கப்பூர் "ஃபிலிம் கமிஷன்" ஆதரவில் பட்டப்படிப்பை முடித்தவர். தென்னிந்தியத் தொலைக்காட்சி நடிகர்கள் சங்கம் நடத்திய போட்டியில் விருதுபெற்ற பெருமையும் இவருக்கு உண்டு. 2008-ஆம் ஆண்டில் இண்டர்நேஷனல் "யூத் ஐகான்" என்ற அங்கீகாரம் இவருக்குக் கிடைத்தது. மேலும் 2012-ஆம் ஆண்டின் பிரதான விழாவில் சிறந்த நிகழ்ச்சிப் படைப்பாளர் என்னும் விருதையும் இவர் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கவுரை
கதைகள்வழி மகிழ்ச்சியான கற்றல்
கதைசொல்லுதல் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் ஒரு முக்கிய உத்தியாகும். குழந்தையின் படைப்பாற்றலை மேம்படுத்துவதில் கற்பனைத்திறன் பெரும் பங்கு வகிக்கிறது. இது பேச்சு மற்றும் கருத்துப்பரிமாற்றத் திறன்களையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவுகிறது. குழந்தைகளைக் கதைகளில் ஈடுபடுத்தும்போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள். பயனுள்ள கதையைச் சொல்லும்போது தன்னுள் உள்ள உணர்வுகள், சக மனித உணர்வுகள் ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிந்துணர்வு உண்டாகின்றது. மேலும், அது குறித்த யோசனைகளும் புத்தாக்கச் சிந்தனைனகளும் தூண்டப்படுகின்றன. இதன்வழி, உகந்த கதை சொல்லும் உத்தி, ஊடாடும் திறன் மற்றும் புத்தாக்கத்துடன் கதைகளைச் சொல்லும் முறையைக் கற்றலில் இணைந்து கற்றலை மகிழ்வூட்டும் அனுபவமாக மாற்றுகிறது. எனவே, வாருங்கள்! இப்பயிலரங்கின் வாயிலாகக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சுவைபடச் சொல்லி மொழி ஈடுபாட்டை வளர்ப்போம்; கற்றலை இனிமையாக்குவோம்.
Profile
Mrs Rani Kanna is a professional storyteller, art educator and actor. She is a former MOE Tamil teacher and holds a degree in Tamil Literature from India. She also has a Master’s degree in Applied Linguistics and hands-on experience with traditional art forms from India which she teaches and infuses with the learning of Tamil. Mrs Kanna has actively participated in many storytelling festivals both in Singapore and overseas. Her narrations, enriched with actions and voices, are full of life. She has been directing and acting in pre-school musicals since 2014 and is passionate about making the learning of Tamil fun for young children.
An avid explorer of theatre and fine arts since childhood, Mr Anandha Kannan is a gregarious, animated and engaging artist. He is the Founder Director of AK Theatre Limited (Singapore), a theatre which stages plays for children; Creative Director of Anandha Koothu Trust and Artistic Director of AKT Creations. A Singapore Film Commission scholar, he is a passionate performer who is keen to share his vast knowledge, insights and love for the theatre with students from all walks of life. He has been awarded the International Youth Icon at the World Universities Youth Conference (2008), Best Actor in Television Actors Guild Awards (South India, 2008) and Best Anchor PradhanaVizha 2012 (Singapore TV Awards).
Synopsis
Joyful Learning through Stories
Storytelling is a powerful medium to stimulate imagination in kids. Imagination enhances a child’s creativity and fosters confidence in communication and speaking skills. This session will share enjoyable techniques for storytelling, interactivity and innovation that will stimulate your children’s imagination and inspire them. Let us make narratives come alive for children.