Ms Elakeyaa Selvaraji

Ms Elakeyaa Selvaraji
Ministry of Manpower
Senior Manager
தன்விவரம்
திருமதி இலக்கியா செல்வராஜி, மனிதவள அமைச்சில் தற்போது மூத்த மேலாளராக பணியாற்றிவருகிறார். இதற்கு முன்னதாக, மீடியகார்ப் நிறுவனத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலச் செய்திப் பிரிவுகளில் மூத்த நிருபராகவும் செய்திப் படைப்பாளராகவும் ஏழு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பல விருதுகளை வென்றிருக்கும் திருமதி இலக்கியா, சிறந்த தகவல் தொடர்பு நிகழ்ச்சிக்கான படைப்பாளர் மற்றும் சிறந்த இளைய நிருபருக்கான பாராட்டுகளையும் பெற்றுள்ளார். இரண்டு பிள்ளைகளுக்குத் தாயாரான திருமதி இலக்கியா, இளம் வயதில் பிள்ளைகளுக்குத் தமிழ்மொழி ஆர்வத்தை எப்படி ஏற்படுத்துவது என்பது பற்றி அவ்வப்போது பகிர்வுகளில் பேசிவருகிறார்; அவற்றில் பற்பல உத்திகளையும் பகிர்ந்துவருகிறார்.
சுருக்கவுரை
தெரிந்தும் தெரியாமலும் சின்னஞ்சிறிய தமிழ்ப்பாடம்
இன்றைய சூழலில், பிள்ளைகளிடையே தமிழ் மொழி மீதான ஆர்வத்தை எவ்வாறு தூண்டுவது என்பது பல பெற்றோருக்கு எழும் ஐயப்பாடாகும். தமிழ்ப் பயிற்சித் தாட்களைச் செய்வதும் துணைப்பாட வகுப்புகளில் ஈடுபடுத்துவதும் பிள்ளைகளுக்கு மொழிமீதான ஆர்வத்தை அதிகரிக்காது. பிள்ளைகளிடையே ஆர்வத்தைத் தூண்டுவதற்குரிய மிகப்பொருத்தமான உத்திமுறைகளைப் பயன்படுத்துவது அவசியம். இவ்வுத்திமுறைகள் இயல்பாகவும் அச்சுறுத்தாத வகையிலும், அமைவது முக்கியம். இத்தகைய உத்திமுறைகளே பிள்ளைகள் சுயமாக முன்வந்து மொழி கற்றலில் ஈடுபடுவதற்கு வழிவகுக்கும். இரண்டு இளம் பிள்ளைகளுக்குத் தாயாராக இருக்கும் அவர், தனது பிள்ளைகளிடம் தொடர்ந்து பயன்படுத்திவரும் உத்திமுறைகளையும் முயற்சிகளையும் இப்பகிர்வங்கத்தின் வாயிலாகப் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார். இவற்றைப் பெற்றோர் அவரவர்களுக்கேற்ப மாற்றி அமைத்துக்கொள்ளலாம்.
Profile
Ms Elakeyaa Selvaraji is currently working as a senior manager with the corporate communications division at the Ministry of Manpower. Prior to this, she worked at Mediacorp for 7 years in the field of journalism as both a journalist and a News Presenter with the Tamil News Division and Channel News Asia. During her stint with Tamil News, Ms Elakeyaa won several accolades such as Best Host (Info-Ed), A special commendation as a “Young Journalist of the Year” and other awards including Best News story. She has special interest in education, parenting and Tamil Language. She has actively promoted parenting tips and Tamil Language cultivation ideas for young children.
Synopsis
Fun-filled Ways in the Learning of the Tamil Language
Current key concerns amongst young Indian parents is how to nurture the love of the Tamil Language in their children. A love for the language cannot be derived from tuition or assessment books and practices. Rather, a child’s engagement with the language needs to be fun, practical, engaging and creative. In this workshop, participants will learn of the challenges the presenter faced in getting her children to speak Tamil and the efforts she made to cultivate their interest in the Tamil Language through strategies such as streamlining learning with what children see, do and like. Come and learn useful tips in making children engaged in the learning of the Tamil Language.