கலகலப்பாய்க் கதை சொல்வோமே!
Back | View Speaker's profile here | View Synopsis here |

Mrs Rani Kanna
திருமதி ராணி கண்ணா
ஏகேடி கிரியேஷன்ஸ் நிறுவனர்
ஏகேடி கிரியேஷன்ஸ்
தன்விவரம்
திருமதி ராணி கண்ணா முழு நேரமாகக் கலை, கல்வித் துறைகளில் ஈடுபட்டுவரும் ஆசிரியர், கலைஞர், பயிற்றுவிப்பாளர், AKT-இன் நிறுவனர். தமிழில் இளங்கலையும் பயன்பாட்டு மொழியியலில் முதுகலையும் படித்தவர். ஆங்கிலம், தமிழ் இருமொழிகளிலும் புலமை பெற்றவர். இருமொழிகளிலும் முழு நேரக் கதைஞராக இருக்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கதை சொல்லுதல், நாடகப்பட்டறை ஆகியவற்றை முழுநேரப் பயிற்றுநராக வழிநடத்துகிறார். மேலும், மரபுக்கலைகளைப் பயின்று அவற்றின்வழி எவ்வாறு தமிழ்மொழியைக் கற்க ஊக்குவிக்கலாம் என்னும் ஆய்வையும் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் மாணவர்களுக்கு மரபுக்கலைகளையும் தமிழையும் கலந்து கற்பித்து வருகிறார். ஆசிரியர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகளையும் நடத்தி வருகிறார். அவரது நிறுவனம் மேடையேற்றும் நாடகங்களிலும் தமிழோடு மரபுக்கலைகளையும் இணைத்து அரங்கேற்றி வருகிறது. மாணவர்கள் தமிழ்மொழியையும் மரபுக்கலைகளையும் மகிழ்ச்சியோடு கற்க வேண்டும் என்பதே ராணியின் இலக்காகும்.
Profile
Mrs Rani Kanna, Director of AKT Creations, is a passionate storyteller, arts educator, and actor. Her narrations are detailed with actions, voices, and full of life. She is passionate about developing language through storytelling and dramatisation. Mrs Rani finds great joy in working with children and hopes to instill in them a love of language and values through her storytelling. She is a lifelong learner who is always eager to acquire new knowledge which she can incorporate into her storytelling.
சுருக்கவுரை
கதை சொல்லுதல் என்பது மனித உணர்ச்சிகள், பிறர் உணர்வை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல், புதிய யோசனைகள், புத்தாக்கச் சிந்தனை முதலியவற்றைத் தூண்டும். பேச்சுமூலமும் நாடகம்மூலமும் நாம் குழந்தைகளை ஆக்கபூர்வமான கலைச் சூழலுக்குள் கொண்டுசெல்லும்போது, மொழி மீதான ஆர்வத்தை அவர்கள் வளர்த்துக்கொள்வதற்கும் புதிய யோசனைகளை அவர்களது சிறிய உலகில் அறிமுகப்படுத்துவதற்குமான வாய்ப்புகளை உருவாக்குகிறோம். உகந்த கதை சொல்லும் உத்தி, ஊடாடும் திறன், புத்தாக்கத்துடன் கதை சொல்லுதல் என்பன வாயிலாகக் கற்றலை நாம் மகிழ்ச்சிகரமானதாக்கலாம். இப்பகிர்வில் கதைகளைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் சில வழிமுறைகளை ஆராய்வோம். தமிழ் கற்றலை எளிமையாக்குவோம்.
Synopsis
Interactive storytelling through drama can help foster a love of reading in our children. Storytelling not only enhances vocabulary, and improves grammar and comprehension, but also stimulates children’s imagination and provides them with a better understanding of the world. So, how can we make storytelling interactive and engaging? Studies have shown that the child benefits much more when the storytelling and story reading experience is engaging and active. Here are some ways we can bring stories to life and make it interesting for kids. Let’s explore these strategies and make storytelling a fun and bonding experience.